உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பா.ஜ., நிர்வாகிகள் பேசிய ஆடியோ: உண்மையா? போலியா?: திடீர் வைரல்

பா.ஜ., நிர்வாகிகள் பேசிய ஆடியோ: உண்மையா? போலியா?: திடீர் வைரல்

திருநெல்வேலி: தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பா.ஜ., வளரும் என ஹிந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் உடையார் திருநெல்வேலி பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழ்செல்வத்திடம் பேசியதாக ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ உண்மையா அல்லது போலியா என்பது தெரியவில்லை.பா.ஜ.,வின் முக்கிய பிரமுகர் தமிழ்செல்வன் உடன், உடையார் ஆடியோவில்,‛‛ தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறாமல் தோல்வி அடைந்துவிட்டது. வேதனையாக இருக்கிறது. திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை மக்களுக்கு கொடுக்காமல் கட்சியினர் வீட்டுக்குள் வைத்து கொண்டனர். நயினார் நாகேந்திரன் தனது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மூலமாகவே அனைத்து வாக்காளர்களுக்கும் பணத்தை விநியோகம் செய்தார். அதனால் உண்மையான பா. ஜ.,வினருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.அண்ணாமலையின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சதி செய்துள்ளனர். இதனால் தான் தமிழகத்தை பா.ஜ.,வை வெற்றி பெற செய்யாமல் செய்துள்ளனர். தமிழகத்தில் இதற்கு முன்னால் இருந்த எந்த தலைவர்களும் எழுச்சிகரமான பணியை செய்யவில்லை. கட்சியினர் வேலை செய்தால், தமிழகத்தில் பா.ஜ.,வை வெற்றி பெற செய்து இருப்பார்கள். கலவரம் செய்தால் தான் பா.ஜ.,வால் தமிழகத்தில் காலூன்ற முடியும். இவ்வாறு ஹிந்து மக்கள் கட்சி திருநெல்வேலி உடையார் மற்றும் பா.ஜ.,வின் முக்கிய பிரமுகர் தமிழ்செல்வன் உரையாடும் ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த ஆடியோ உண்மையா அல்லது போலியா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rajarajan
ஜூன் 11, 2024 08:50

உண்மையோ பொய்யோ. அதை விசாரணைக்கு விட்டுவிடுவோம். தமிழகத்தில் தி.மு.க. எப்படி வளர்ந்தது ?? பிராமண எதிர்ப்பு, போராட்டம், வன்முறை, தனிமனித தாக்குதல் இப்படித்தான். உண்மையா, இல்லையா ?? புதிதாக பாதை போடுவது தான் கடினம். ஏற்கனவே, ஒருவர் போட்டுவைத்த பாதையில் பயணித்து, இலக்கை அடைவது எளிது, என்று தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை வன்முறையாக மாறுகிறது போலும். தவறு செய்பவரை விட, தவறை செய்ய தூண்டியவருக்கு தான் தண்டனை அதிகம். அறுபதுகளில் பிராமண எதிர்ப்பை தூண்டி, புதுப்பாதையை தோற்றுவித்த தி.மு.க. விற்கு என்ன தண்டனை ??


kumar
ஜூன் 10, 2024 19:25

படித்தவர்களாக இருந்தால் பரவாயில்லை . உன்னை போல் காசுக்கு மாறிய பாவாடைகள் இருக்கின்றதனால் தான் ஊழல் மாநிலமாக இருக்கிறது .


Neutrallite
ஜூன் 10, 2024 19:22

200 ரூ உப்பிகள் வரிசை கட்டி வந்து கருத்து போடுகிறார்கள்...அப்படி என்றால் அவர்கள் வாட்ஸாப்ப் குழுவில் வந்த செய்தி போலிருக்கிறது.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 10, 2024 18:18

இதுமாதிரி பாஜக நிர்வாகிகள் பேசுவது சகஜம்தானே... இதுல வேற இது போலி... எதிர்க்கட்சியா இருக்குற மாநிலத்துலயாவது “கலவரம்“ இல்லாத நாள் ஏது..


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 10, 2024 22:59

கொத்தடிமை நீ இப்படி எழுதவில்லை என்றல் தான் ஆச்சரியம்.


Vathsan
ஜூன் 10, 2024 18:05

பாஜகவினர் இந்த மாதிரி மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும்.


venugopal s
ஜூன் 10, 2024 17:48

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?அவர்கள் சாதாரணமாகவே இப்படிப் பேசுவது வழக்கம் தானே!


ஆரூர் ரங்
ஜூன் 10, 2024 17:33

கதை வசனம் அறிவா..ம். வேறு யாருக்கு இது போல் சிந்திக்க வரும்?


S S
ஜூன் 10, 2024 17:28

இதுவே எதிர்கட்சி நிர்வாகிகள் தொடர்பான செய்தி என்றால் 100% உண்மை என்பது போல் வெளியிடப்பட்டிருக்கும்.


Venkatanarayanan S
ஜூன் 10, 2024 17:26

இதுவே திமுக ஆளா இருந்தா இந்த பதிவு இங்க உண்மைய போலியா என்றே வராது, நடுநிலமை என்பது துளி கூட கிடையாது


Neutrallite
ஜூன் 10, 2024 19:29

டெண்டுல்கர் மேல் இந்தியாவை தோற்கடிக்க முயன்றார் என்ற புகார் வந்தால் அது உண்மையா பொய்யா என்று தான் செய்தி போடுவார். ஏற்கெனவே பணத்தாசை பிடித்த வீரர் மேல் புகார் வந்தால் அப்படி செய்தி வராது. அது போலத்தான், எதிர் கட்சி என்று நீங்கள் மறைமுகமாக சொல்லும் திராவிட ஊழல்வாதிகள் பற்றி வரும் செய்தியையும் பாஜக செய்தியையும் வேறு வேறாக தான் பார்க்க முடியும்.


விஸ்வநாத் கும்பகோணம்
ஜூன் 10, 2024 17:05

சுரேஷ் கோபி பற்றிய செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. . திமுக, அஇஅதிமுக கை கோர்த்ததால் இப்படிப்பட்ட தாக்குதல்கள் பாஜகவின் மேல் வீசப்படும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை