மேலும் செய்திகள்
அக்கா கொலை: தம்பிக்கு ஆயுள்
13-Aug-2024
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கல்லுாரி கட்டணம் செலுத்த பணம் கேட்ட மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திருநெல்வேலி மாவட்டம் சீலாத்திகுளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து 54. குடிப்பழக்கத்தால் இவருக்கும், மனைவி மீனாட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மீனாட்சி மகளுடன் தனியாக வசித்து வந்தார். இசக்கிமுத்து மகன் வேல்முருகன் 22, 2019ல் வள்ளியூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கல்லூரி கட்டணம் செலுத்த தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 2019 நவ., 10 இரவு வீட்டில் தூங்கிய வேல்முருகனை தந்தை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் அவர் இறந்தார். இதற்கிடையில் யாருக்கும் தெரிவிக்காமல் இசக்கிமுத்து வெளியூர் சென்றார்.வேல்முருகனுடன் பயின்ற சக மாணவர்கள் இரண்டு நாட்களாக அவர் கல்லூரிக்கு வராததால் வீட்டுக்கு தேடி சென்று பார்த்தனர். வீட்டில் வேல்முருகன் துர்நாற்றத்துடன் இறந்து கிடந்தார்.ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை இசக்கிமுத்துவை கைது செய்தனர். மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இசக்கிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பளித்தார்.
13-Aug-2024