உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மகன் இறப்பால் துக்கம்: தாய், மகள் தற்கொலை

மகன் இறப்பால் துக்கம்: தாய், மகள் தற்கொலை

திருநெல்வேலி:திருநெல்வேலியில் குடும்பத்தை கவனித்த மகன் மாரடைப்பில் இறந்ததால் மனமுடைந்த தாய் மற்றும் அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே கீழதென்கலத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 50. கூலி தொழிலாளி. மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் முத்துக்கிருஷ்ணனின் தாயார் பகவதி 78, தனியே வசித்து வந்தார். திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வந்துள்ள தங்கை மாலாவும் 45, தாயாருடன் வசித்தார்.தனது குடும்பத்தையும் தாயார் மற்றும் தங்கையையும் முத்துக்கிருஷ்ணன் கவனித்து வந்தார். நேற்று முன்தினம் முத்துகிருஷ்ணன் மாரடைப்பால் இறந்தார். பகவதி மற்றும் மாலா ஆகியோர் முத்துகிருஷ்ணன் இறந்த வீட்டில் தங்களை கவனித்து வந்தவர் இறந்துவிட்டாரே அழுது புலம்பியபடி இருந்தனர்.இதனிடையே வீட்டுக்குச் சென்ற தாயும் ,மகளும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தாழையூத்து போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை