மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:நெல்லை அருகே அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 41 லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.நெல்லை அருகே தாழையூத்து, சங்கர்நகரைச் சேர்ந்தவர் சியாம்சுந்தர்(52). இவர் தாழையூத்து, டி.என்.எச்.பி., காலனியைச் சேர்ந்த மணிகண்டபிரபு(28), அவரது குடும்ப உறுப்பினர்கள் அதிக லாபம் தருவதாகக்கூறி தன்னிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் உத்தரவுப்படி, மாவட்டக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., (பொ) பொன். ரகு மேற்பார்வையில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவாகினர்.இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வழக்கில் தொடர்புடைய மணிகண்ட பிரபு, அவரது மனைவி சுவேதா(21), மணிகண்ட பிரபுவின் அண்ணன் மாரிகணேஷ்(33), அவரது மனைவி கனகா(27), மணிகண்டபிரபுவின் தாய் செல்வியை(54) ஈரோட்டில் நேற்று போலீசார் கைது செய்தனர்.இவர்கள் அதிக லாபம்பெற்றுத்தருவதாகக்கூறி, ரூ. 41 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படைக்கு எஸ்.பி., சிலம்பரசன் பாராட்டு தெரிவித்தார்.***
29-Sep-2025
25-Sep-2025