மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் 58, தீயில் கருகி இறந்த சம்பவத்தில் அவரது மகன்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள கிணற்றில் தடயம் கிடைக்கலாம் என்பதற்காக தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.திசையன்விளை அருகே கரைசுத்து புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கடந்த 2ம் தேதி இரவில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிச் சென்றார். மறுநாள் அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் , உவரி போலீசில் தந்தையை காணவில்லை என புகார் அளித்தார். ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் என சந்தேகிக்கும் பெயர்களுடன் எழுதிய கடிதங்களை கொடுத்தார். ஜெயக்குமார் எரிந்த நிலையில் கரைசுத்துபுதூரில் அவர்களின் தோட்டத்திலேயே இறந்து கிடந்தார்.அவர் உடலை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்களே இதனை செய்தார்களா அல்லது வெளியிடங்களில் வந்து கூலிப்படையினர் செய்தார்களா என விசாரிக்கின்றனர். தடயங்கள் சேகரிப்பு
சாதாரண தனிநபர் வழக்கு என்றால் இதற்குள் தற்கொலை என்றோ அல்லது கொலை எனக்கூறியோ குற்றவாளிகளை கைது செய்து போலீசார் வழக்கை முடித்திருப்பார்கள். ஆனால் ஆளும் கட்சி தி.மு.க.,வின் கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர் என்பதோடு அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் இதை உன்னிப்பாக கவனித்து வருவதால் போலீசார் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க தடயங்களை சேகரித்து வருகின்றனர்.2ம் தேதி இரவில் 7:30 மணிக்கு வெளியே சென்றவர் நள்ளிரவில் காரில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் காரை அதற்குரிய ஷெட்டில் நிறுத்தாமல் வெளியே நிறுத்தியுள்ளார். கார் சாவி அவரது பாக்கெட்டிலேயே இருந்துள்ளது. சம்பவ இடத்தில் ஒரு பாட்டில் கிடந்ததை எடுத்தனர். அதையும் ஒரு தடயமாக கொண்டு விசாரிக்கின்றனர். மகன்களிடம் விசாரணை
வெளியூர் கூலிப்படைகள் குறித்து போலீஸ் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது குடும்பத்தினரிடம் மீண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது மகன்கள் ஜெப்ரின் மற்றும் மார்ட்டின், மற்றும் அவர்களது நண்பர்கள் ஆறு பேரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து காணாமல் போன இரண்டு மொபைல் போன்கள் அவர்களது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே கிணற்று தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி கிணற்றில் ஏதேனும் ஆவணங்கள், தடயங்கள் கிடைக்குமா என விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைத்து இரவில் கிணற்றை கிணற்று நீரை வெளியேற்றி சோதனை கொள்ள முடிவு செய்தனர்.
29-Sep-2025
25-Sep-2025