உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு

கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு

விக்கிரமசிங்கபுரம்:கார் சாகுபடி பாசனத்திற்காக, பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. மொத்தம் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 75.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 472.60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.இந்நிலையில், கார் சாகுபடி பாசனத்திற்காக பாபநாசம் அணையை நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று திறந்து வைத்தார். அணையிலிருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 88.84 அடியாக இருந்தது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை திறக்கப்படும்.இத்தண்ணீரின் மூலம் வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் 2,260 ஏக்கர், தெற்கு கோடைமேலழகியான் கால்வாயில் 870 ஏக்கர், நதியுன்னி கால்வாயில் 2,460 ஏக்கர், கன்னடியான் கால்வாயில் 12,500 ஏக்கர் ஆக மொத்தம் 18,090 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி