மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அடைமதிப்பான்குளம் கல் குவாரியில், 2022 மே 14ல் ஏற்பட்ட பாறைச்சரிவில் நான்கு பேர் இறந்தனர். இச்சம்பவத்தையொட்டி, தமிழக அரசு அதிகாரிகள் இம்மாவட்டத்தில் செயல்பட்ட, 55 கல் குவாரிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், 16 குவாரிகள் முறையான அனுமதி இன்றி செயல்படுவது தெரிந்து நடவடிக்கை எடுத்தனர். சில குவாரிகளுக்கு, 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து கல் குவாரிகளும் மூடப்பட்ட நிலையில் மீண்டும் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் குவாரிகள் செயல்படுகின்றன.சமூக செயற்பாட்டாளர் பெர்டின் ராயன், 2023 நவம்பர் 15ல் கவர்னர் ரவிக்கு திருநெல்வேலி மாவட்ட கல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மனு அனுப்பினார். கவர்னர், அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.இது குறித்து, உயர் நீதிமன்றம் உதவி பதிவாளர் கே.எஸ்.ஜெயஸ்ரீ, கலெக்டர் கார்த்திகேயனுக்கு அனுப்பிய கடிதத்தில், கல் குவாரிகள் முறைகேடு குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.
29-Sep-2025
25-Sep-2025