மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் இன்னும் போலீசார் துப்புத் துலக்கவில்லை. தொடர்புடைய 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 58. மே 2 இரவு வீட்டில் இருந்து காரில் கிளம்பினார். பின்னர் வீடு திரும்பவில்லை. ஆனால் இரவில் கார் மட்டும் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. அவரை காணாததால் மகன் கருத்தையா ஜெப்ரின் மே 3 மாலை உவரி போலீசில் தந்தையை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில் மே 4 காலை கரை சத்துபுதுாரில் ஜெயக்குமாரின் வீட்டின் பின் உள்ள அவரது தென்னந்தோப்பில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் ஜெயக்குமார் உடல் கிடந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இரண்டு நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை் முடிவுகள் போலீசாரால் அறிவிக்கப்படவில்லை.கண்டெடுக்கப்பட்டது ஜெயக்குமாரின் உடல் தானா என்ற சந்தேகம் அவரது மனைவி ஜெயந்தி உள்ளிட்டோருக்கு இருந்தது. எனவே அதை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அவரது மூத்த மகன் கருத்தையா ஜெப்ரினிடம் சாம்பிள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 20 பேருக்கு சம்மன்
ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக சந்தேகம் உள்ள நபர்களிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எழுதிய புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், பள்ளி தாளாளர் ஜெய்கர், ஆனந்தராஜா, குத்தாலிங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் வசிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், ஜெயக்குமார் காசோலையை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தது கடிதம் மூலம் தெரியவந்தது. எனவே நேற்று காலை அவரது வீட்டிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பொருளாதார சிக்கல்
ஜெயக்குமாரின் தந்தை கருத்தையா காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டவர். ஜெயக்குமார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆன பிறகு அவருக்கு பொதுப்பணித்துறை காண்ட்ராக்ட் உள்ளிட்ட எந்த பணிகளும் கிடைக்காதபடி அரசியல் ரீதியாக அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் வருமானம் இன்றி தவிப்பில் இருந்துள்ளார். தற்போதைய லோக்சபா தேர்தலிலும் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரான கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புரூஸ் சொந்த பணத்தை செலவழிக்க வில்லை. பண விஷயத்தில் முழுக்க தி.மு.க.,வையே நம்பியிருந்தனர்.எதிர்த்து பா.ஜ., போட்டியிடுவதால் காங்கிரஸ் தோல்வியடையும் என ஆரம்பகட்ட கருத்துக்கணிப்புகள் வந்ததால் தி.மு.க., வேறு வழியின்றி கோடிக்கணக்கில் பணத்தை இறக்கி செலவழித்தனர். அந்த வகையில் காங்கிரசாருக்கு பூத் செலவு கூட தி.மு.க.,வினரே தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கனவே தேர்தலுக்காக தங்கபாலுவிடமும் ரூபி மனோகரனிடமும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருந்த ஜெயக்குமாருக்கு இந்த தேர்தலிலும் முக்கிய பொறுப்பு வழங்கப்படாமல் தேர்தல் நிதியும் வழங்கப்படாததால் அவர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.இது தொடர்பாகவும் அவர்களது வீட்டில் சர்ச்சைகள், வாக்குவாதங்கள் நடந்துள்ளது. எனவே நிதி நெருக்கடியில் தான் கடைசி நேரத்தில் தனக்கு பணம் தரவேண்டிய நபர்களின் பட்டியலை எழுதி வைத்துள்ளார். கொலையா... தற்கொலையா...
ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த இரண்டு கடிதங்கள் அவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தது தெரிய வந்தது. எனவே அவரே தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். ஆனால்அவர் உடலில் கை கால்களில் கட்டப்பட்டிருந்த மின் வயரின் மிச்சம் அவரது வீட்டில் தற்போது இருப்பது தெரியவந்துள்ளது.அவரது உடல் போஸ்ட் மார்ட்டத்தின்போது வாயில் திணிக்கப்பட்டிருந்த பேப்பர்கள் எடுத்ததாக தெரிகிறது. எனவே அது குறித்தும் சந்தேகம் உள்ளது.அவர் எழுதி வைத்த கடிதத்தால் சர்ச்சை எழுந்ததால் தங்கபாலு, ரூபி மனோகரன் போன்றவர்கள் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை. கே.ஏ. அழகிரி சந்தேகம்..
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.ஏ.அழகிரி ஆறுதல் தெரிவிப்பதற்காக நேற்று ஜெயக்குமார் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் கூறுகையில்,ஜெயக்குமார் இறப்பு வருத்தத்திற்குரியது. இதனை நான் அரசியலாக்க விரும்பவில்லை. எந்தவித அனுமானத்திலும் அரைகுறையாகவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் கொலை என தெரிய வருகிறது. தங்கபாலு, ரூபி மனோகரன் போன்றவர்களுடன் அவரது தொடர்பு குறித்து எனக்கு தெரியாது. அவர்களுக்கிடையிலான நட்பு குறித்து எனக்கு தெரியாது. போலீஸ் துறைக்கு சவாலான சம்பவம். கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை கண்டறிய வேண்டியது போலீசார் என்றார். 7 தனிப்படைகள்
ஜெயக்குமார் கொலை குறித்து திருநெல்வேலி கமிஷனர் மூர்த்தி, எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் 7 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஜெயக்குமார் உடல் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வந்திருக்கும். அவர் தற்கொலை செய்து இருந்தால் இதற்குள் போலீசார் அதனை அறிவித்திருப்பார்கள். கொலை, சந்தேக மரணம் என்பதால் துப்புத் துலக்குவதில் உள்ள சிக்கல்களால் அதனை வெளிப்படையாக அறிவிக்க தாமதமாகிறது.
29-Sep-2025
25-Sep-2025