உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வெட்டப்பட்ட மாணவருக்கு திருமாவளவன் ஆறுதல்

வெட்டப்பட்ட மாணவருக்கு திருமாவளவன் ஆறுதல்

திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு மாணவர் தேவேந்திரராஜா பள்ளிக்கு செல்லும்போது கபடி போட்டி முன்விரோதத்தில் மூவரால் சரமாரியாக வெட்டப்பட்டார். காயமுற்ற மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் மாணவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.பிறகு திருமாவளவன் கூறியதாவது: மாணவர் வெட்டப்பட்டதை ஜாதி ரீதியிலான வன்முறையாகக் கருதி, போலீசார் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவரின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்க வேண்டும். அவரது கல்வி பாதிக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் மற்ற மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் ஜாதிய வன்முறைகள் மிகப்பெரிய அபாயமாக உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rajan_subramanian manian
மார் 14, 2025 08:33

தம்பி, உனக்காக தெருவில் இறங்கி போராட என் உள் மனம் துடித்தாலும், என்னால் இப்போது எதுவும் செய்யமுடியாத கையறுநிலையில் உள்ளேன். தலைவரிடம் அடுத்த தேர்தலில் பணம் மட்டும் சீட் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளபோது இந்த வெட்டுகளை பெரியமனத்தோடு தாங்கிக்கொண்டு கழக வேட்பாளர்கள் எட்டி உதைத்தாலும் அன்போடும் பண்போடும் என்னை மாதிரி அழாமல் வாங்கிக்கொண்டு வோட்டை போட்டு மீண்டும் திராவிட ஆட்சி பெருந்தலைவர் ஸ்டாலின், தலைவர் உதயா அண்ணன், இளைய தளபதி இன்ப நிதி ஆகியோருக்கு இந்த அண்ணன் போல கொத்தடிமையாய் இந்த நூற்றாண்டு முடியும் வரை வாழ வேண்டுகிறேன். பின்குறிப்பு. தலைவர் எனக்கு அறிவாலயத்தில் உடைந்த பிளாஸ்டிக் chair இல்லாததால் இந்தமுறை உடைந்த மர நாற்காலிக்கு காயலான் கடையில் அன்போடு ஆர்டர் செய்துள்ளார் என்பதை மட்டற்ற பெருமையோடு தெரிவித்து கொள்கின்றேன்.


முக்கிய வீடியோ