உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தி.மு.க., மாஜி எம்.பி.,யின் லாரிகள் பறிமுதல்

தி.மு.க., மாஜி எம்.பி.,யின் லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் வள்ளியூர், லெவிஞ்சிபுரம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அடுத்தடுத்து வந்த மூன்று லாரிகளில் அரசு அனுமதிச்சீட்டு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சரள் மண் கொண்டு வரப்பட்டது தெரிந்தது.பழவூர் போலீசார் மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்து, டிரைவர்களான மதன், மணிகண்டன், பால்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த லாரிகள் திருநெல்வேலி தி.மு.க., முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்தின் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூன் 07, 2024 06:29

ஏதே, திமுக வினரின் லாரியை பறிமுதல் செய்யும் தைரியம் எப்படி வந்தது? நாற்பதுக்கு நாற்பது பெற்ற அவர்கள், அனைத்து கனிம வளங்களையும் கடத்தும் முழு அதிகாரம் பெற்றவர்கள்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ