வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரக்கர்கள் மனித மிருகங்கள்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி விக்னேஷ், 40. இவரது மனைவி ரம்யா, 35. இவர்களுக்கு 7 வயது மற்றும் 3 வயதில், சஞ்சய் என்ற மகனும் இருந்தனர். நேற்று காலை மூத்த மகனை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்த விக்னேஷ், காலை, 9:00 மணிக்கு இளைய மகன் சஞ்சயை அங்கன்வாடியில் விட தேடினார். சிறுவனை காணவில்லை.அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் சஞ்சயை காணவில்லை. இதனால் நேற்று மதியம், 12:00 மணிக்கு ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். விக்னேஷ் வீட்டின் எதிரில் வசிக்கும் ஆறுமுகம் மனைவி தங்கத்திடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவர் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, பயன்பாட்டில் இல்லாத பழைய வாஷிங் மிஷினுக்குள் ஒரு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில், சஞ்சய் உடல் இருந்தது. 3 வயது சிறுவன் கொடூரமாக கொலையானது அறிந்து, தாய் உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் கதறினர்.சிறுவனை கொலை செய்த தங்கம், 45, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.போலீசார் கூறியதாவது:எதிரெதிர் வீடு என்பதால், குழாயில் தண்ணீர் பிடிப்பதில் விக்னேஷ், ஆறுமுகம் குடும்பத்தினர் இடையே பிரச்னை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. தங்கத்தின் 23 வயதான மகன் இரண்டு மாதங்களுக்கு முன் டூ - வீலரில் சென்ற போது, மற்றொரு டூ - வீலர் மீது மோதி இறந்தார். மகன் இறந்த பின், தங்கம் மன அழுத்தத்தில் இருந்தார்.இதனால் சஞ்சயை கொலை செய்து, வீட்டின் பின்புறம் புதைக்க திட்டமிட்டு, இச்செயலில் ஈடுபட்டார். சிறுவன் சஞ்சய் அடிக்கடி தங்கம் வீட்டுக்குள் சென்று விளையாடிக் கொண்டிருப்பார் என, அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.
அரக்கர்கள் மனித மிருகங்கள்