உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஏ.எஸ்.பி., உட்பட 11 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்

ஏ.எஸ்.பி., உட்பட 11 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்

திருநெல்வேலி:நெல்லையில் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் உட்பட ௧௧ பேர் கோர்ட்டில் ஆஜராகினர்.அம்பாசமுத்திரம் பகுதி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அப்போதைய ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் மீது கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் உட்பட 14பேர் மீது4 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது கடந்த டிசம்பர் மாதம் நெல்லை ஜே.எம்.௧ கோர்ட்டில் 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கி ஜாமின் அளிக்கப்பட்டது.இதற்கிடையில், ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை அரசு ரத்து செய்தது. வழக்கில் தொடர்புடைய ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் உட்பட 11பேர் நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜராகினர். எஸ்.ஐ.,க்கள் முருகேசன், ஆபிரகாம் ஜோஸ், காவலர் இசக்கித்துரை ஆஜராகவில்லை.வழக்கு விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் (பொ) ஆறுமுகம் உத்தரவிட்டார். ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணைக்கு வந்ததையொட்டி நெல்லை கோர்ட்டில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ