வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கிருந்து எங்கே
திருநெல்வேலி:கர்நாடகா மாநிலம் மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை திருநெல்வேலியில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச்சென்றனர்.கர்நாடக மாநிலம் உல்லால் பகுதியில் கோட்டேகர் கூட்டுறவு வங்கியில் ஜன.17ல் முகமூடி அணிந்த 5 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ரூ.பல கோடி, நகைகளை கொள்ளையடித்தனர். இதில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பத்மநேரியைச் சேர்ந்த முருகாண்டி, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஜோஷ்வா ஆகியோரை மங்களூரு போலீசார் திருநெல்வேலியில் நேற்று கைது செய்தனர். அவர்களது வீடுகளில் இருந்து 3 துப்பாக்கிகள், நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர். நேற்று மாலை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி பின் மங்களூரு அழைத்துச் சென்றனர்.
எங்கிருந்து எங்கே