வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த உலகத்தை ஏன் கடவுள் இன்னும் அழிக்காமல் இருக்கிறார்?
மேலும் செய்திகள்
குழந்தையை கொன்று எரித்த கொடூர தாய், தந்தை கைது
24-Apr-2025
திருநெல்வேலி:தகாத உறவுக்கு இடையூறாக இருந்த, 2 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், குழந்தையின் தாயை கைது செய்த போலீசார், அவரது இரண்டு ஆண் நண்பர்களை தேடி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே மகாதேவன்குளத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை இருந்தது. சரத் வெளியூரில் வேலை செய்கிறார். பிருந்தாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் தகாத உறவு இருந்தது.நேற்று முன்தினம் இரவு, ஆண் நண்பர்கள் இருவர் பிருந்தாவை அழைத்தனர். அவர்களை சந்திக்க பிருந்தா குழந்தையுடன் சென்றார். அங்குள்ள நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் பிருந்தா, முத்து என்பவருடன் தகாத உறவில் இருந்தார். அப்போது குழந்தை அழுதது. அங்கு வந்த மற்றொரு ஆண் நண்பர் லிங்கம் குழந்தையை துாக்கி சென்றார்.இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக கூறி, லிங்கம் பிருந்தாவிடம் குழந்தையின் உடலை கொடுத்தார். நேற்று காலை, பிருந்தா இறந்த குழந்தையை துாக்கிக் கொண்டு, சாத்தான்குளம் அருகே சண்முகபுரத்தில் வசிக்கும் தாய் வீட்டிற்கு சென்றார். குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக, தாயிடம் பிருந்தா நாடகமாடினார். அவர் குழந்தையையும், பிருந்தாவையும் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதித்த போது, குழந்தை உதட்டில் காயம் இருப்பதாகவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், பிருந்தா நடந்த விபரங்களை கூறினார். வழக்கு பதிவு செய்த போலீசார் பிருந்தாவை கைது செய்தனர். முத்து, லிங்கத்தை தேடி வருகின்றனர்.தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை கொலை செய்யப்பட்டதா அல்லது பாலியல் சீண்டலில் குழந்தை இறந்ததா என, பிரேத பரிசோதனை அறிக்கை வாயிலாகவும், முத்து, லிங்கம் பிடிபட்ட பிறகும் தான் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
இந்த உலகத்தை ஏன் கடவுள் இன்னும் அழிக்காமல் இருக்கிறார்?
24-Apr-2025