உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கோவில் கொடை விழாவில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

கோவில் கொடை விழாவில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி:கோவில் கொடை விழாவில், கரகாட்ட பெண் கலைஞருக்கு அன்பளிப்பு கொடுத்த பிரச்னையில், மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பத்மநேரியில் நேற்று முன்தினம் இரவு, ஒரு கோவில் கொடை விழா நடந்தது. இதில், கரகாட்ட கலைஞர்கள் நடனம் ஆடினர். பக்கத்து கிராமம் சிங்கி குளத்திலிருந்து, சில வாலிபர்கள் கரகாட்டம் பார்க்க வந்தனர். அதில் ஒருவர், கரகாட்ட பெண் கலைஞருக்கு, அன்பளிப்பாக பணம் கொடுத்தார். விழா தரப்பினர், 'வெளியூர் நபர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம்' எனக்கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர். இதில், ஆத்திரமுற்ற, சிங்கிகுளத்து வாலிபர்கள் நேற்று காலை அரிவாள்களுடன் பத்மநேரி வந்து, அங்கிருந்த மாரியப்பன், 25, பிரகாஷ், 28, இசக்கி பாண்டி, 26, ஆகியோரை சரமாரியாக வெட்டி தப்பினர். படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். களக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !