உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெண் போலீஸ் வீட்டில் 45 பவுன் நகை திருட்டு

பெண் போலீஸ் வீட்டில் 45 பவுன் நகை திருட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் பெண் போலீஸ் வீட்டின் பீரோவை உடைத்து 45 பவுன் நகைகள் திருடப்பட்டன.திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு பெண் போலீஸ் தங்கமாரி 45, என்பவரது வீடும் உள்ளது. இவரது கணவர் ராஜ்குமார் தனியே வணிகம் செய்கிறார். 13 வயது, 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். தங்கமாரி மாநகர போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக உள்ளார். நேற்று மாலை தங்கமாரி பணி முடிந்து வந்த போது வீட்டின் கதவு திறந்திருந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. தங்கமாரி பணிக்கு செல்லும்போது அவர் வழக்கமாக வைக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்து மர்மநபர்கள் இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !