கொலையில் 7 பேருக்கு குண்டாஸ்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் மாயாண்டி கடந்தாண்டு டிச., 20 நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த மாயாண்டி கொலையில் கீழநத்தத்தைச் சேர்ந்த மனோராஜ் 29, தங்கமகேஷ் 21, முத்துக்கிருஷ்ணன் 31, சிவா 19, கல்லத்தியான் மகன் கண்ணன் 21, ராமகிருஷ்ணன், சுடலை மகன் கண்ணன் 25, கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டார்.