உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலியில் 9 பேருக்கு கொரோனா

திருநெல்வேலியில் 9 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையினர் கிருஷ்ணாபுரம், சுத்தமல்லி, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இவர்களில் வீட்டு தனிமையில் இருந்த 7 பேர் குணமாகிவிட்டனர். சில நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதியானது. தற்போது இரண்டு பேருக்கு பாதிப்பு உள்ளது எனவும், அவர்கள் மட்டும் வீடுகளில் தனித்து இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இல்லை என டீன் ரேவதி பாலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ