மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலியில் போலீசாரை கம்பியால் தாக்கி விட்டு தப்பிய வட மாநில கொள்ளையர்களில் ஒருவர் சிக்கினார்.திருநெல்வேலி ஜங்ஷன் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் ஜன.,13 இரவு ரோந்து சென்றனர். பாலபாக்யா நகர் பகுதியில் ஒரு டூவீலரில் சென்ற மூன்று பேர் அங்கு பூட்டப்பட்டிருந்த கடையின் ஷட்டரை உடைத்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அந்த கும்பல் இரும்பு கம்பி மற்றும் கற்களால் போலீசாரை தாக்கி விட்டு தப்பினர். இதில் எஸ்.ஐ. நாராயணன், போலீஸ் சரவணபிரகாஷ் ஆகியோர் காயமடைந்தனர்.அந்த கும்பல் வட மாநிலத்தவர்கள் எனவும் வள்ளியூர், பணகுடி வட்டாரத்திலும் இதேபோல கடைகளின் ஷட்டர்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஜன.,15 இரவு தூத்துக்குடி சத்திரம் தெருவில் ஒரு டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைத்து ஒரு லட்சம் ரூபாய், மது பாட்டில்களை சிலர் திருடிச் சென்றனர். சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்தபோது அதிலும் வட மாநில நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துாத்துக்குடியில் போலீசாரை கண்டதும் ஐந்து பேர் கும்பல் தப்பி ஓடியது. ஒருவர் மட்டும் சிக்கினார். அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராகுல்சிங் மகன் ராய்சிங் 28, என தெரியவந்தது. அண்மையில் தமிழகம் வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்
29-Sep-2025
25-Sep-2025