உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மூன்றடைப்பு அருகே விபத்து; வேன் டிரைவர், நடத்துனர் பலி

மூன்றடைப்பு அருகே விபத்து; வேன் டிரைவர், நடத்துனர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே படலையார்குளத்தை சேர்ந்தவர் மகேஷ், 20. இவரது மினி லாரியில் சென்னையிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அருகே மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பொருட்களை ஏற்றி வந்தார். முதலைகுளத்தைச் சேர்ந்த நடத்துனர் உசிலவேல், 36, உடன் வந்தார். திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் ஒரு புறத்தில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் கீழ்புறம் உள்ள ஒரு சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்லும் நெருக்கடியான பாதை உள்ளது. நேற்று காலை, 6:00 மணிக்கு மூன்றடைப்பு மேம்பாலத்தில் மகேஷ் ஓட்டிச்சென்ற மினி லாரி, எதிரே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில், மினி லாரியின் முன் பகுதி முழுதும் நொறுங்கியது. விபத்தில், மகேஷ், உசிலவேல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மூன்றடைப்பு போலீசார் விசாரித்தனர். துாத்துக்குடி, சண்முகபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 29. இவரது நண்பர் நிஷாந்த், 25. இருவரும் நேற்று முன்தினம் டூ - வீலரில் குற்றால அருவியில் குளிக்கச் சென்றனர். இரவு, 11:00 மணிக்கு திருநெல்வேலி -- தென்காசி நான்கு வழிச்சாலையில், மாறாந்தை டோல்கேட் அருகே வேகமாக சென்ற போது, அங்கு புதிதாக உயரமான ஸ்பீடு பிரேக்கர் அமைக்கப்பட்டுள்ளது கண்ணுக்கு தெரியாமல், நிலைதடுமாறி துாக்கி வீசப்பட்டனர். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.நிஷாந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார். ஆலங்குளம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பெரிய குத்தூசி
அக் 26, 2024 12:57

படத்தை பார்க்கும்போது மினி லாரி டிரைவர் போன் பார்த்துக்கொண்டே ஒட்டியிருந்தால் மட்டுமே எதிரே வந்த பஸ் லைனில் புகுந்து இருக்கிறார். வாகனம் ஓட்டும்போது போன் பார்ப்பதை தவிர்க்கவும். 1 வினாடி போன் பார்ப்பதற்குள் என்னன்னவோ நடந்து பலரின் வாழ்க்கை குடும்பம் சிதைந்து விடுகிறது. வாகனம் ஓட்டும் போது கைபேசியை தொடவோ குறுந்செய்திகளை படிக்கவோ, அல்லது நம்பர் type பண்ணவோ வேண்டாம்.


புதிய வீடியோ