உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மருத்துவ கழிவுகள் கொட்டிய மருந்து நிறுவன பிரதிநிதி கைது

மருத்துவ கழிவுகள் கொட்டிய மருந்து நிறுவன பிரதிநிதி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலியில் மருத்துவ கழிவுகளை ரோட்டோரமாக கொட்டிய மருந்து நிறுவன பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ராஜகோபாலபுரம், நான்கு வழிச் சாலையில் சில தினங்களுக்கு முன் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. ஏற்கனவே பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் இது குறித்தும் சர்ச்சை ஏற்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர். சமாதானபுரம் சக்திநகரை சேர்ந்த கார்த்திகேயன் 35, என்பவர் ஒரு மருந்து கம்பெனியில் பிரதிநிதியாக இருந்தார். அவருக்கு இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகள் காலாவதியானால் அவர் அதனை 10 மாதங்களுக்கு முன் ரோட்டோரமாக கொட்டியது தெரிய வந்தது.போலீசார் அவரை கைது செய்து சொந்த ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !