உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / லஞ்ச பணத்துடன் சிக்கிய உதவி கமிஷனர் சஸ்பெண்ட்

லஞ்ச பணத்துடன் சிக்கிய உதவி கமிஷனர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி:ஊட்டியில் 11 லட்சத்து 70 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய உதவிகமிஷனர் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாநகராட்சியில் மேலப்பாளையம் உதவி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா; பின்னர் ஊட்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மாதம் லஞ்சமாக வசூலித்த ரூ. 11 லட்சத்து 70 ஆயிரத்துடன் காரில் சென்னை செல்லும் வழியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.எந்தெந்த முறைகேட்டுக்கு வாங்கப்பட்ட பணம் எவ்வளவு என்ற பட்டியலையும் அவர் கொடுத்தார்.காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவர் திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர் திருநெல்வேலி மாநகராட்சியில் பணியில் சேர வந்தபோது கமிஷனர் சுகபுத்ரா அவரை பணியில் சேரவிடாமல் திரும்ப அனுப்பினார்.இதனிடையே ஜஹாங்கீர் பாஷா, நவ. 29ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையர்எஸ்.சிவராசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankar
டிச 09, 2024 09:22

பார்த்து - சோகபுத்ரா ஆகிவிடாதீர்கள் - விடியலின் வேலை விபரீதமாக இருக்கும்


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 08, 2024 22:44

மேலிடத்து கப்பத்தை முறையாக தகுந்த கணக்கு வழக்குகளோடு கட்டாவிட்டால் காலம் தாழ்த்தியாவது தண்டனை நிச்சயம்


sankar
டிச 08, 2024 18:30

தெரியாத செய்தி - சபாஷ்


K.n. Dhasarathan
டிச 08, 2024 16:54

வெறும் சஸ்பேன்ஷன் மட்டுமா ? ஏன் இந்த மாதிரி திமிங்கலங்களை டிஸ்மிஸ் பண்ண மாடீர்களா ? இதுவரை எத்தனை லட்சங்களோ அல்லது கொடிகளோ ? அதற்கெல்லாம் ஆதாரம் தேட முடியுமா ? தயவு செய்து டிரான்ஸ்பர் செய்து அவமானப்படுத்தாதீர்கள், போகிற இடமெல்லாம் விஷத்தை விதைப்பார்கள். அந்த விஷமெல்லாம் முளைத்தால் ? ஐயோ, நினைத்தாலே பயமாயிருக்கிறது.


Perumal Pillai
டிச 08, 2024 15:39

"அவர் திருநெல்வேலி மாநகராட்சியில் பணியில் சேர வந்தபோது கமிஷனர் சுகபுத்ரா அவரை பணியில் சேரவிடாமல் திரும்ப அனுப்பினார்". சுகபுத்ரா போன்ற நல்லவர்கள் இந்த ஆட்சியிலும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்.


VENKATASUBRAMANIAN
டிச 08, 2024 09:00

இதுபோல் நிறையவே அதிகாரிகள் உள்ளனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை