வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு நேர்மையான அதிகாரியை ஒழித்துக்கட்ட என்னவெல்லாம் செய்கிறார்கள். இதில் உச்சக்கட்டம் லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகளே குற்றவாளிகளுடன் கரம் கோர்த்திருப்பதுதான். இதன் ஆணிவேர் யார் என்பது மக்களுக்கு தெரியவேண்டும்
திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க முயற்சித்த மேலும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணபாபுவை 50, லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க திட்டமிட்ட கும்பல், நவம்பர் 17 இரவு, துணை இயக்குநர் அலுவலகத்தில் ரூ.2.50 லட்சத்தை மர்ம நபர் மூலம் வைத்தனர். பின்னர் அதே நபர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்து சோதனை நடத்தச் செய்தனர். இந்த சம்பவத்தில் பின்னணியாக இருந்த துாத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த், திருநெல்வேலி டவுன் தீயணைப்பு வீரர் மூர்த்தி, சென்னை அம்பத்துார் வீரர் முருகேஷ், மேலும் பணம் வைத்துச் சென்ற விஜய் மற்றும் முத்துசுடலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்தீயணைப்பு வீரர் மூர்த்தியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்ரியா சஸ்பெண்ட் செய்தார். அதேபோல், வடசென்னை தீயணைப்பு வீரர் முருகேஷை மாவட்ட அலுவலர் லோகநாதன் சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலர் மீது விசாரணை நடக்கிறது.
ஒரு நேர்மையான அதிகாரியை ஒழித்துக்கட்ட என்னவெல்லாம் செய்கிறார்கள். இதில் உச்சக்கட்டம் லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகளே குற்றவாளிகளுடன் கரம் கோர்த்திருப்பதுதான். இதன் ஆணிவேர் யார் என்பது மக்களுக்கு தெரியவேண்டும்