இருட்டுக்கடை உரிமையாளரின் அத்தை மரணம்
திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்துகிறார். இவரது தந்தையின் அக்கா சுலோச்சனா பாய், 87. இவர், உடல் நல குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.இரு தினங்களுக்கு முன் நெல்லை சென்ற முதல்வர் ஸ்டாலின், இருட்டுக்கடையில், அல்வா வாங்கி சுவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.