உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / விபத்தில் தாத்தா, பேத்தி பலி கார் ஓட்டிய சிறுவன், தாய் கைது

விபத்தில் தாத்தா, பேத்தி பலி கார் ஓட்டிய சிறுவன், தாய் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், சிறுவன் ஓட்டிய கார் மோதி தாத்தா, பேத்தி உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாயார் சிறையில் அடைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் 56. முடி திருத்தும் கடை நடத்தி வந்தார். இவர் தீபாவளியன்று மதியம் 3:00 மணிக்கு பேத்தி வர்ஷா 14, உடன் மொபட்டில் கன்னியாகுமரி நோக்கிச் சென்றார். பழவூர் அருகே அதிவேகமாக வந்த கார் அவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் தாத்தா, பேத்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பழவூர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்தக் காரை ஓட்டியவர் திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன் என தெரியவந்தது. சிறுவன் கைது செய்யப்பட்டு, இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 18 வயது நிறைவடையாத, டிரைவிங் லைசென்ஸ் பெற தகுதியற்ற சிறுவனை கார் ஓட்ட அனுமதித்ததாக அவரது தாயார் திவ்யா 41, கைது செய்யப்பட்டு கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவனின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

suresh Sridharan
அக் 23, 2025 09:34

500 ரூபாய் கொடுத்தால் டிரைவரை அழைத்துக் கொள்ளலாம் இப்ப ரெண்டு பேருக்கும் அம்மாவும் மகனும் கனவுகள் உடைந்து இனி நித்தம் இவர்களுக்காக கட்டப்பட்டு உழைக்கும் தந்தை மன அமைதி இல்லாமல் அருள்பட வேண்டும் இதுதான் இவர்கள் செய்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை