உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / முதியவர்களை வெட்டிய சிறுவர்கள் கைது

முதியவர்களை வெட்டிய சிறுவர்கள் கைது

திருநெல்வேலி:சேரன்மகாதேவியைச் சேர்ந்த சிறுவர்கள் கோட்டைவிளைதெரு பகுதியில் டூவீலர்களில் வேகமாக சென்றனர். இதனை அந்த பகுதி முதியவர்கள் கண்டித்தனர். நேற்றிரவு அங்கு சென்ற அந்த சிறுவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் 58, சரவணன் 60, ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் தந்தை சரவணன் வெட்டப்படுவதை தடுக்க முயன்ற அவரது 16 வயது மகனும் அரிவாளால் வெட்டப்பட்டார். மற்றொரு சிறுவனுக்கும் அரிவாளால் வெட்டு விழுந்தது. இதில் ஈடுபட்டதாக மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
செப் 03, 2025 12:28

முன்னாள் திமுக அயலக அணித்தலைவரின் விற்பனை பிரிவு எப்போ தடை செய்யப்படும்


Mohan
செப் 03, 2025 07:38

எல்லாம் உங்கள் உ.பி. வடக்கன்ஸ் ஸ்டைல்


Mani . V
செப் 03, 2025 06:10

அப்பாவின் ஆட்சியில் வீரனின் உபயத்தால் சிறுவர்களுக்கு கூட வீரம் வந்து விடுகிறது.


சமீபத்திய செய்தி