அண்ணன் கொலை; தம்பி கைது
திருநெல்வேலி; நாங்குநேரி அருகே பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி கைது செய்யப் பட்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பரப்பாடி அருகே வலியனேரியை சேர்ந்தவர் பாலன் 50. அவரது தம்பி ராஜ்குமார் 46. தனித் தனியே வசித்தனர். இவர்களின் மூத்த சகோதரர் மறைந்த ராஜுவின் மனைவி கலாரதி, துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் 4 பவுன் நகை காணாமல் போனது. இது தொடர்பாக கலாரதி குடும்பத்தினர் ராஜகுமாரை கண்டித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் அண்ணன் பாலன் தான் உள்ளார் என முன்விரோதம் கொண்ட ராஜ்குமார் நேற்று அதிகாலையில் வீட்டு முன் துாங்கிக்கொண்டிருந்த பாலனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். ராஜ்குமாரை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.