உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  ரயிலில் கஞ்சா: மூவர் கைது

 ரயிலில் கஞ்சா: மூவர் கைது

திருநெல்வேலி: சென்னையில் இருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு குருவாயூர் சென்ற ரயில் திருநெல்வேலி வந்தபோது ரயில்வே போலீசார், பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். இன்ஜினுக்கு அடுத்த முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இரண்டு பைகளில் இருந்த 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மண்டல் 40, மிட்டு மண்டல் 35, ரிட்டுகுமார் மண்டல் 36, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை