உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா எரிப்பு

ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா எரிப்பு

திருநெல்வேலி:ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் போலீசார் பறிமுதல் செய்த ரூ.1 கோடி மதிப்பிலான 984 கிலோ கஞ்சா, நேற்று நீதிமன்ற உத்தரவுப்படி நாங்குநேரி அருகே தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடியில் உள்ள 'அசெப்டிக் சிஸ்டம்ஸ் பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் எனும் தனியார் மைய வளாகத்தில் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுகின்றன.அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 158 வழக்குகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் 27 வழக்குகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 984.721 கிலோ கஞ்சா நேற்று தீ வைத்து அழிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மூர்த்தி, சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத், கூடுதல் எஸ்.பி. பிரான்சிஸ், நாங்குநேரி டி.எஸ்.பி., தர்ஷிகா நடராஜன், தடய அறிவியல் நிபுணர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை