உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஜெபம் செய்யச் சென்றவர்களை வழிமறித்து வாக்குவாதம் 3 பேர் மீது வழக்கு

ஜெபம் செய்யச் சென்றவர்களை வழிமறித்து வாக்குவாதம் 3 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே ஜெபம் செய்யச் சென்றவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தமிழக பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தென்காசிமாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டேவிட் நிர்மல்துரை தலைமையில் சிலர் கடந்த 22 ல் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கீழக்கல்லுார் மற்றும் நடுக்கல்லுார் கிராமங்களுக்கு ஜெபம் செய்ய சென்றனர். அவர்கள் கீழக்கல்லுாரில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்து முன்னணி ஆதரவாளர் மணிகண்டன் மகாதேவன், பா.ஜ., பிரமுகர் அங்குராஜ் உள்ளிட்ட மூவர் வழிமறித்தனர். டேவிட் உடன் வந்த சிலரை அருகிலிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு செல்லும்படி வற்புறுத்தியதாக டேவிட் நிர்மல்துரை பின்னர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி மணிகண்டன் மகாதேவன், அங்குராஜ், அவரது சகோதரர் சங்கர் ஆகிய மூவர்மீதும் மத அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அங்குராஜ் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனிடம் உதவியாளராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !