உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 14 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு

14 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு

திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரத்தில், 14 பேரை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன், 40. இவரது வீட்டில் வளர்க்கும் நாய், தெருவில் சென்ற 13 பேரை கடித்தது. கிருஷ்ணனையும் கடித்தது. இதில், பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அம்பாசமுத்திரம் வட்டாரத்தில், மூன்று மாதங்களில் வெவ்வேறு நாய்கள் கடித்ததில் , 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் புகாரின்படி, நாய் உரிமையாளர் கிருஷ்ணன் மீது, விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N S
செப் 22, 2025 20:14

"விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்". பாவம் அவர்கள் கோர்ட்டிற்கு "நாயா" அலைய வேண்டி இருக்கும்.


Premanathan S
செப் 22, 2025 09:55

அவரை வெறி நாயையே விட்டு கடிக்க செய்வதே சரியான தண்டனை


N S
செப் 22, 2025 20:11

செய்தியை படிக்கவும். "கிருஷ்ணனையும் கடித்தது". அவரையும் விட்டு வைக்க வில்லை. ......


Vasan
செப் 22, 2025 07:22

வளர்த்த கடா மாரில் பாயும் என்பார்களே, அது இது தானோ?


நிக்கோல்தாம்சன்
செப் 22, 2025 04:32

யோவ் என்னய்யா நடக்குது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை