வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள் .... இவர் போன்றவர்கள் தான் நெல்லை சீமையின் உண்மையான அடையாளமே ....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சாந்தா சர்மிளா இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இவர், 5 நிமிடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் 12 திருக்குறளை எழுதி சாதனை படைத்தவர். இந்த சாதனைக்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.மேலும் ஒரு நிமிடத்தில் 14 கண்ணாடி பிரதிபலிப்பு தமிழ் எழுத்துக்களை (Mirror Image) இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தான் பெற்ற சான்றிதழ்களை முதல்வரிடம் காண்பித்து சாந்தா சர்மிளா வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது பெற்றோர் சென்று இருந்தனர்.
வாழ்த்துக்கள் .... இவர் போன்றவர்கள் தான் நெல்லை சீமையின் உண்மையான அடையாளமே ....