உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கோயில் நிலத்தில் சர்ச் ஹிந்து முன்னணி போராட்டம்

கோயில் நிலத்தில் சர்ச் ஹிந்து முன்னணி போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கோயில் நிலத்தில் சர்ச் கட்ட முயற்சிப்பதை கண்டித்து ஹிந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி ஜங்ஷன் கருப்பந்துறையில் தாமிரபரணி கரையில் அழியாபதீஸ்வரர் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து சர்ச் கட்ட முயற்சிக்கின்றனர். புகார் தெரிவித்தும் அறநிலையத்துறையோ போலீசாரோ நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நேற்று ஹிந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் அமைப்பினர் கோயில் முன்பாக ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஷ்வரன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். நிலம் மீட்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை