மேலும் செய்திகள்
மருத்துவர் நியமனம்; மக்கள் மகிழ்ச்சி
07-Jul-2025
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நகர் நல அலுவலராக இருந்த டாக்டர் சரோஜா 2024 பிப்ரவரியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடுமுறையில் சென்றார். அப்போது மாநகராட்சிக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் பினாயில் வாங்குவதற்கு கொட்டேஷன் தயாரானது. வழக்கமாக மாநகராட்சிக்கு ரூ.10 முதல் 15 லட்சத்திற்குள் தான் பினாயில் வாங்குவது வழக்கம். ஒரே தடவையில் ரூ.55 லட்சத்திற்கு பினாயில் வாங்க கொட்டேசனை அப்போது மாநகர நல அலுவலராக தற்காலிக பொறுப்பில் இருந்த டாக்டர் ஆனி குயின் தயாரித்தார். இரண்டு மாத விடுமுறைக்கு பிறகு டாக்டர் சரோஜா மீண்டும் பணியில் சேர்ந்தார். அப்போது ரூ.55 லட்சத்திற்கு பினாயில் வாங்கியதற்கான பில் வந்தது. இதையடுத்து அவர் இருப்பை சரிபார்த்தபோது சரியாக இல்லை. எனவே வாங்காத சரக்கிற்கு பில் அனுமதிக்க முடியாது என பில்லுக்கு கையொப்பமிட மறுத்தார். இது குறித்து அப்போது தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆனி குயினுக்கு 17 ஏ பிரிவு குறிப்பாணையை மாநகராட்சி கமிஷனர் ஆக இருந்த தாக்கரே வழங்கினார். இந்த குற்றச்சாட்டு நிலுவையில் இருந்தது. இந்நிலையில் மேலப்பாளையத்தில் ஒரு கர்ப்பிணி காலதாமதமாக மருத்துவமனையில் சேர்ந்ததால் தாயும், சேயும் பலியாகினர். இந்த சம்பவத்திலும் ஆனி குயின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் ஜூலை 31 ஆனி ஓய்வு பெற வேண்டும். குற்றசாட்டுகள் நிலுவையில் இருந்ததால் ஓய்வு பெறும் நாளில் ஆனி குயினை சஸ்பெண்ட் செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மதுசூதன் உத்தரவிட்டார். பாவம் ஓரிடம்.. பழி ஓரிடம்... மாநகராட்சி நகர் நல மையங்களில் டாக்டர்களாக இருப்பவர்கள் பொறுப்பு நகர் நல அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே பணியாற்றியவர் ஆனிகுயின். ரூ.55 லட்சத்திற்கு பில் தயாரித்து மோசடி செய்ய காரணமான மேல்மட்டத்தினர் தப்பித்துக் கொண்ட நிலையில், கையெழுத்திட்டு பில் அனுப்பிய டாக்டர் ஆனிகுயின் சிக்கிக்கொண்டார். மேலப்பாளையத்தில் கர்ப்பிணி இறந்த விவகாரத்திலும் ஆனி குயின் சிக்க வைக்கப்பட்டார்.
07-Jul-2025