உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சொத்துவரி, இதர வரிகளை 31ம் தேதிக்குள் செலுத்த மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

சொத்துவரி, இதர வரிகளை 31ம் தேதிக்குள் செலுத்த மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

திருநெல்வேலி : சொத்துவரி மற்றும் இதரவரிகளை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கமிஷனர் அஜய் யாதவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சி சட்டம் 25/1981 பிரிவு 126ன் படி ஒவ்வொரு அரையாண்டு ஆரம்பித்த 15 தினங்களுக்குள் சொத்துவரியினை விதிப்பாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டும். சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக்கட்டணம் ஆகிய வரியினங்களை 2011-12 முதல் அரையாண்டு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வரிவிதிப்பாளர்கள் நிலுவை மற்றும் நடப்பு அரையாண்டிற்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை சேவைக்கட்டணம் ஆகிய வரியினங்களை தவறாமல் வரும் 31ம் தேதிக்குள் கண்டிப்பாக செலுத்தவேண்டும். மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியினை 31ம் தேதிக்குள் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையையும், சட்டப்பூர்வ நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ