நோயாளியிடம் ஆபாச பேச்சு டாக்டர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் நோயாளியிடம் பாலியல் ரீதியாக பேசிய டாக்டர் கைது செய்யப்பட்டார்.வள்ளியூரை சேர்ந்தவர் டாக்டர் பாலச்சந்தர், 48. பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்தார். சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியுள்ளார். பெண் புகாரில் போலீசார், டாக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.