உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போதை ஏட்டு ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

போதை ஏட்டு ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். ஆலங்குளம் அருகே நல்லுாரை சேர்ந்தவர் பிரிட்டோ 40. தீபாவளியன்று நண்பர்களுடன் மது அருந்தி மருதம்புத்துாரில் காரில் சுற்றியுள்ளார். மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி சென்றுள்ளார். இதனால் பொதுமக்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆலங்குளம் போலீசார் பிரிட்டோவை அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் பல இடங்களில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரிட்டோவை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி.,அரவிந்தன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ