மேலும் செய்திகள்
பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி
13-Feb-2025
திருநெல்வேலி: துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி திருநெல்வேலியைச் சேர்ந்த தந்தை, மகன் பலியாயினர். தகவல் அறிந்த மனைவி கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.திருநெல்வேலி புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் 55. துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மகன் கிருஷ்ண சங்கர் 22. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படித்துள்ளார். இவர் ஒரு நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் பயிற்சிக்காக நண்பர்களுடன் துபாய் சென்றிருந்தார். பயிற்சி முடிந்து மற்ற நண்பர்கள் கிளம்பிவிட்டனர். அவரது தந்தை துபாயில் இருந்ததால் அவருடன் தங்கி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் குளிக்க சென்றனர். இதில் ஆழத்தில் சிக்கி கிருஷ்ண சங்கர் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயற்சித்து இறங்கிய மாதவனும் மூழ்கி இருவரும் பலியாயினர். அலைபேசியில் தகவல் அறிந்த மாதவன் மனைவி விமலா திருநெல்வேலியில் மனமுடைந்தார்.இரு கைகளிலும் கத்தியால் கிழித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை மாதவன், கிருஷ்ண சங்கரரின் உடல்கள் திருநெல்வேலி வந்தன. சிந்துபூந்துறை மின் மயானத்தில் எரியூட்டப்பட்டன.
13-Feb-2025