பறக்கும் படை சோதனை: ரூ.6.10 லட்சம் பறிமுதல்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். களக்காடு அருகே வெங்கட்ரங்கபுரம் பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த நாங்குநேரி தாலுகா மேல சடையமான்குளம் அருகே உள்ள ஸ்ரீ கோவிந்தபேரி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் 43, என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது வாகனத்தின் பெட்ரோல் டேங்க் பையில் 6.10 லட்சம் பணம் கட்டுகளாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அம்பை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், நிலம் விற்ற பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்வதாக ரவிச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.