உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஜெயக்குமார் மர்ம மரணம்: காங்., எம்.எல்.ஏ., மற்றும் தங்கபாலுவிடம் விசாரணை

ஜெயக்குமார் மர்ம மரணம்: காங்., எம்.எல்.ஏ., மற்றும் தங்கபாலுவிடம் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காங்., எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்(58) மே 2ம் தேதி இரவு முதல் காணவில்லை. மே 3 மாலையில் அவரைக் காணவில்லை எனக்கூறி அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து வந்த நிலையில் மே 4 காலை கரைசத்துபுதூரில் ஜெயக்குமாரின் வீட்டின் பின் உள்ள அவரது தென்னந்தோப்பில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் ஜெயக்குமார் உடல் கிடந்தது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக சந்தேகம் உள்ள நபர்களிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எழுதிய புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், பள்ளி தாளாளர் ஜெய்கர், ஆஜந்த்ராஜா,குத்தாலிங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே உள்ள பணப்பரிமாற்றம் தொடர்பாக போலீசார் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தங்கபாலு பேட்டி

போலீசார் சம்மனை ஏற்று கே.வி.தங்கபாலு தூத்துக்குடி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: போலீசார் அழைப்பானை அனுப்பி உள்ளனர் அதற்காக வந்துள்ளேன். எனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் ஒரு பைசா கூட வாங்கியது இல்லை. வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகினார்.வீட்டில் விசாரணைஇதனைடையே, ஜெயக்குமார் வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தினர். தடயம்ஜெயக்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்ததாகவும், அதன் கவர் அவரது வீடு அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajah
மே 07, 2024 17:36

தங்கபாலு ?????????


Nesan
மே 07, 2024 16:38

மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு இந்த கெதி சாமானியனுக்கு??? இதில் உண்மை வெளிவரும் என்பது கானல் நீர் போன்றது நேர்மையற்ற அரசியல் வாதிகள் முடக்கிருவாங்க கடந்த காலத்தை பாருங்கள் தாகிருஷ்ணன், அண்ணா நகர் ரமேஷ், நேரு தம்பி, என்ன ஆச்சு அமிக்கிட்டாங்க திரு அண்ணாமலை சொன்னது தான் யாபகத்தில் வருது, " என்னிடம் பல கேடு செய்தற்கான ஆவணங்கள் இருக்கின்ற, அதை வெளியிட ஆள்கள் இல்லை அதையும் மீறி நிருபர்கள் வெளியிட்ட பாவம் தண்ணீ லாரிக்கும், டேங்கர் லாரிக்கும் இரையாக வேண்டியது யாரும்" இது தான் இன்றய அரசியல் நிலைமை இது அனைவரும் நன்கு அறிந்த உண்மை தெய்வம் தான் தண்டனை கொடுக்க வேண்டும் பலங்களா அரசு அன்று கொள்ளும், ஆனால் தெய்வம் நின்று கொள்ளும் கொள்ளணும், குற்றவாளிகளை


Duruvesan
மே 07, 2024 14:38

நல்லாட்சி நடத்தும் கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க


Rajah
மே 07, 2024 17:39

சம்பத்தப்பட்ட அனைவருமே கர்த்தரின் சீடர்கள்தான்


Kasimani Baskaran
மே 07, 2024 13:58

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்த்துறை விரைவில் குற்றவாளிகளை கண்டு பிடித்து விடும்


duruvasar
மே 07, 2024 13:07

எந்த காங்கிரஸ்காரனிடம் உம் ஒரு பைசா வாங்கியதில்லை என கூறியிருக்கிறார் இதை இரண்டு விதமாக பார்க்கலாம் இவரிடம் எந்த காங்கிரஸ் காரனும் ஏமாந்த தில்லை மற்றொன்று வாங்கிதெல்லாம் மற்ற கட்சி காரர்களிடம் தான் என்பதாக எடுத்துக்கொள்ளலாம்


Srinivasan Krishnamoorthi
மே 07, 2024 13:06

என்னத்த விசாரணை போங்க


மேலும் செய்திகள்







புதிய வீடியோ