உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மனிதக்கழிவு கொட்டிய லாரி டிரைவர் கிளீனர் கைது

மனிதக்கழிவு கொட்டிய லாரி டிரைவர் கிளீனர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலியில் செப்டிக் டேங்க் லாரி மூலம் மனிதக் கழிவுகளைக் பொது இடத்தில் கொட்டிய டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி அருகே திருவேங்கடநாதபுரம், மேல குன்னத்துார் பொத்தை பகுதியில் இரவில் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரிகளில் கொண்டு வந்து மனித கழிவுகளை கொட்டுவது தொடர்ந்து நடந்தது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசியது. அங்கு கழிவுகள் கொட்டப்படுவதை அறிந்த அத்திமேடு மக்கள், கழிவு லாரியை முற்றுகையிட்டு போலீசில் புகார் செய்தனர்.லாரி டிரைவர் கொண்டாநகரம் தெய்வக்குமார் 26, கிளீனர் ஜெயகாந்தி 24, ஆகியோரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுத்தமல்லி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arun
பிப் 03, 2025 19:56

அப்போ கழிவுகளை அவர்கள் எங்கே கொட்ட வேண்டும் என்பதை அரசு சொல்லவேண்டும் அவர்கள் அன்றாட தேவைக்காக உழைத்து உண்கிறார்கள்


Perumal Pillai
ஜன 30, 2025 06:33

பரிசுத்தர். கழிவு வண்டியின் பெயர் சூப்பர் .


நிக்கோல்தாம்சன்
ஜன 30, 2025 05:32

நம்மை யாரு என்ன செய்து விடமுடியும் என்று அலையும் கழகத்தினரால் எவ்வளவு தொல்லை ?


முக்கிய வீடியோ