உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெண் வேடத்தில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்தவர் சிக்கினார்

பெண் வேடத்தில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்தவர் சிக்கினார்

திருநெல்வேலி: வள்ளியூரில், பெண் வேடமிட்டு மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மின்வாரிய காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஜினியர் அர்ஜுனன். இவரது மனைவி ருக்மணி, 68. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். மகன் சுந்தர் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணிபுரிகிறார். மற்ற இருவரும் வெளியூரில் உள்ளனர்.அர்ஜுனன், 48 நாட்களுக்கு முன் காலமானார். ருக்மணி அம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்தார். ஜூலை 7ல், தாய்க்கு உணவு கொடுக்க சுந்தர் சென்ற போது, ருக்மணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த, 10 சவரன் நகைகளை காணவில்லை.போலீசார், அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை கவனித்தபோது, முகத்தை மறைத்தபடி செல்லும் பெண் உருவம் பதிவாகியிருந்தது. போலீசார், தீவிரமாக அதை ஆய்வு செய்ததில், களக்காடு சிதம்பராபுரம் வீரவேல் மகன் விஜய், 28, என்பவர், பெண் வேடமிட்டு இருந்ததும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரம், வீட்டு சுவர் ஏறி குதித்து செல்வதும் தெரிய வந்தது.வீட்டுக்குள் அவரை பார்த்ததும் ருக்மணி அலறியுள்ளார். இதனால், 'டிவி'யை 'ஆன்' செய்து சத்தமாக வைத்த விஜய், அவரை கொன்று நகைகளை கொள்ளையடித்து தப்பியது தெரிந்தது.அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன. விரைந்து குற்றவாளியை பிடித்த டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசாரை எஸ்.பி., சிலம்பரசன், டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமணி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishnamurthy Venkatesan
ஜூலை 15, 2025 12:41

வயதான இருபாலருக்கும் ஒரு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள்: "தனியாக இருக்கும் பட்சத்தில் அதிகப்படியான நகைகளையோ பணத்தையோ வைத்துக்கொள்ள வேண்டாம் நீங்கள் தனியாக இருப்பது வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம் CCTV, அலாரம் போன்ற சாதனங்களை உபயோகத்தில் வைத்திருங்கள் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம் இரக்கமும் காட்ட வேண்டாம் தண்ணீர் கொடுப்பது, வீட்டிற்குள் அழைத்து உணவு கொடுப்பது போன்ற செயல்கள் வெளியே இருக்கும் தங்களின் பிள்ளைகளை வாரம்/பத்து நாட்கள் ஒருமுறை வந்து தங்களை பார்த்துவிட்டு செல்ல கட்டாயப்படுத்துங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அருகே உள்ள காவல் துறை எண்ணை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள் வீட்டின் அருகே சந்தேகத்துக்கு இடமுள்ள நபர்களின் movement இருந்தால் உடன் காவல்துறை உதவியை நாடுங்கள். பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்பு சாதனங்களை எளிதாக எடுக்கும் இடத்தில் வைத்திருங்கள். எதற்கும் பயப்படாமல் தைரியமாக பயத்தை வெளிக்காட்டாமல் இருங்கள். கடவுள் காப்பாற்றுவார்.


அப்பாவி
ஜூலை 15, 2025 10:03

கள்ள பார்ட்


சமீபத்திய செய்தி