மேலும் செய்திகள்
இயற்கை விவசாயியான முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி
07-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மத்திய சிறையில், தன் மகனுக்கு, பேரீச்சம்பழத்தில் மறைத்து, கஞ்சா தர முயன்ற தாய் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாச முத்திரத்தை சேர்ந்தவர் லலிதா. இவரது மகன் வினோத், போதைப்பொருள் வழக்கில் கைதாகி, திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ளார். அவரை சிறையில் சந்திக்க சென்ற தாய் லலிதா, பேரீச்சம்பழம், கடலை மிட்டாய் உட்பட தின்பண்டங்கள் கொண்டு சென்றார். சிறை வார்டன்கள் நடத்திய சோதனையில், சில பேரீச்சம்பழங்களில் கொட்டைகள் நீக்கப்பட்டு, அவற்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.
07-Sep-2025