உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நாம் தமிழர் கட்சியில் இருந்து நெல்லை நிர்வாகிகள் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து நெல்லை நிர்வாகிகள் விலகல்

திருநெல்வேலி:திருநெல்வேலியில் சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினரை ஒருமையில் பேசுவதாக கூறி சிலர் வெளியேறினர்.இளைஞர் அணி நிர்வாகிகள், குருதிக்கொடை அமைப்பினர் சுமார் 200 பேர் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக நிர்வாகிகள் பார்வின், கண்ணன் உள்ளிட்டோர் நேற்று தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: சீமான் நாம் தமிழர் கட்சி கொள்கைகளில் இருந்து விலகிவிட்டார். திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு பதவி வழங்குகிறார். கட்சியினரை சந்திப்பதே இல்லை. நிர்வாகிகளை ஒருமையில் பேசுகிறார். நாங்கள் ஸ்லீப்பர் செல் அல்ல. உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் கட்சியில் இணைவோம். நாம் தமிழர் கட்சி தான் ஸ்லீப் ஆகி விட்டது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 07:31

சீமான் மாதிரியே உழைக்காமலே கார், பங்களா, மது, மாது என்று வாழ்க்கை அமையும் என்ற எண்ணத்தில் நா த க வில் சேருகிறார்கள். கைக்காஸைப் போட்டு சீமானுக்கு வேலை பார்க்கிறார்கள். பல வருஷங்கள் ஆன பிறகு தான் சீமான் அசிங்கமான எண்ணம் கொண்ட, ஊரான் உழைப்பில் வாழும் ஜந்து தான் சீமான் என்று தெரிகிறது. வெளியேறுகிறார்கள்.


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 07:18

படிக்க முடியாத தண்ட சோறுகள் சீமானின் நாம் தமிழர், தேசியம், படிக்காதவருக்கும் அரசு வேலை என்கிற உளறல்களைக் கேட்டு அவன் பின்னால் 18 - 25 வயது வரை ஓடுவார்கள். வீட்டில் திருடி அல்லது மிரட்டி பணம் கொண்டு வந்து சீமானுக்கு அனுப்பிவிட்டு, ஏதாவது கட்சிப் பதவி, தேர்தலில் சீட் கிடைக்குமா என்று இருக்கிறார்கள். சீமானின் மொள்ளமாரித் தனமும், திமிரும் புரிந்து கொள்வதற்குள் வயது 30 -35 ஆகி விடுகிறது. அடடா போச்சே 10 வருஷம் என்கிற உணர்வும் தெளிவும் வருபவர்கள் விலகி விடுகிறார்கள். அதற்குள் அடுத்த பேட்ச் 18-25 வயதுக்காரர்கள் வந்து விடுகிறார்கள். படிக்காத, உழைக்காத தறுதலைகள் இருக்கும் வரை நா த க இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை