உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருச்சி ரயிலில் வந்த நெல்லை வாலிபர் பலி

திருச்சி ரயிலில் வந்த நெல்லை வாலிபர் பலி

விருத்தாசலம் : சென்னை - திருச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்ற ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், பொதுப்பயணியர் பெட்டியில், படியில் அமர்ந்து வந்த வாலிபர், திருவெண்ணெய்நல்லுார் மலட்டாறு மேம்பாலத்தில் தவறி விழுந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார்.விசாரணையில், அவர், திருநெல்வேலி, நாங்குநேரி, மகிலடி என்ற இடத்தை சேர்ந்த நாகர்ஜுன், 23, என்பதும், சென்னையில் டிரைவராக பணிபுரிந்ததும் தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

இரா. சந்திரன்
அக் 08, 2024 21:46

படியில் உட்கார்ந்து பயணிக்க முடியாதவாறு தானியங்கி கதவுகளை இனி இரயிலில் பொருத்த வேண்டும்.


முக்கிய வீடியோ