உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / உட்கார ரூ.10 கட்டணம் சேர்களை பறித்த அதிகாரிகள்

உட்கார ரூ.10 கட்டணம் சேர்களை பறித்த அதிகாரிகள்

திருநெல்வேலி:திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உட்கார ரூ.10 வசூலித்த நிறுவனத்தின் சேர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வண்ணார்பேட்டை மேம்பால வடக்கு பகுதியில் மதுரை, சங்கரன்கோவில் உள்ளிட்ட வெளியூர் பஸ்கள் நின்று செல்லும். அங்கு ஒரே ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உட்கார அங்கு இருசக்கர காப்பகம் நடத்தும் ஒரு தரப்பினர் நிறுவனத்தின் வாசலில் சேர்களை போட்டு அதில் உட்கார ரூ. 10 வசூலித்தனர். இதுகுறித்து நேற்று தினமலர் செய்தி வெளியிட்டது.அதன் எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் தச்சநல்லூர் உதவி கமிஷனர் ஜான்சன், உதவி இன்ஜினியர் பேரின்பம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று அந்த வாகன காப்பகத்திற்கு சென்றனர். அனுமதி இன்றி இவ்வாறு கட்டண வசூலில் ஈடுபட்டது தவறு என சுட்டிக்காட்டினர். அவ்வாறு செய்ய மாட்டோம் என எழுத்துபூர்வமாக தருமாறு உத்தரவிட்டனர். அங்கிருந்த 11 சேர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gajageswari
பிப் 25, 2025 12:12

தானும் தரமான சேர்போட . அடுத்தவர் தரமான சேர்போட


Bhaskaran
பிப் 23, 2025 11:59

அதிகாரிகள் ஆசி இல்லாமல் செய்ய முடியுமா ஊடகத்தில் வந்ததால் கண்துடைப்பு நடவடிக்கை பயணிகள் அமருவதற்கு பெரிய நிழல் குடை அமைக்க வக்கில்லாத அரசு ......


ganeshkumar263
பிப் 22, 2025 12:20

குடிக்கும் தண்ணீர்க்கு விலை கொடுக்கும் காலமல்லவா இனி சுவாசிக்கும் காற்றுக்கும் நீங்கள் விலை கொடுக்க வேண்டியதிருக்கும்


Perumal Pillai
பிப் 21, 2025 13:37

ரோட்டில் நடந்து போனால் அதற்கும் இனி ரூபாய் வசூல் செய்வார்கள் போலும் . நல்ல மாடல் . திராவிட கோமாளியின் மாடல் .