உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை : 4 பேருக்கு ஆயுள் : திருநெல்வேலி கோர்ட் தீர்ப்பு

ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை : 4 பேருக்கு ஆயுள் : திருநெல்வேலி கோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பிரபல ரவுடி வைகுண்டம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு தூக்குத்தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.திருநெல்வேலியை அடுத்துள்ள பாளையஞ் செட்டிகுளத்தை சேர்ந்தவர் வைகுண்டம் 45. இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. ஊராட்சி தேர்தல் மோதல், ஒரே சமூகத்தினர் இடையே நடந்த கொலைகள், வெட்டு குத்து வழக்குகளிலும் இவர் சம்பந்தப்பட்டிருந்தார். இவர் தொடர்புடைய ஒரு வழக்கில் கடந்த 2022 மார்ச் 10ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சி கூற இருந்தார்.அவர் சாட்சி கூறினால் வழக்கில் தண்டனை கிடைக்கலாம் என திட்டமிட்ட கும்பல் அன்று காலை அவர் அங்குள்ள கால்வாயில் குளிக்க சென்ற போது வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கு திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேஷ் குமார், முதல் குற்றவாளியான செல்வராஜுக்கு தூக்குத்தண்டனை விதித்தார். அந்தோணி பிரபாகர், அருள் பிலிப், ஆண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வ லீலா, ஜாக்குலின் ஆகியோருக்கு இரண்டு மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.இரு தரப்பினர் இடையே நடந்த மோதல்களில் தண்டனை வழங்கப்பட்டதால் திருநெல்வேலி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nallavan
மார் 14, 2025 15:24

யார் குற்றம் பண்ணினாலும், பின்னணி யில் , அவர் மீது, 5 , 6 வழக்குகள் நிலுவையில் இருந்தன னு தான் வருகின்றன. இதுக்கு ஒரு முடிவே இல்லையா. 5, 6 முறை தப்பு பண்ணினவன், வெளியே வந்து எப்படி சரியாய் இருப்பான். இவங்களுக்கு ஜாமீன் வாதாடுன, ஜாமீன் கொடுத்தவர்களுக்கு ஏதாச்சும் தண்டனை கொடுத்தா, தான் சரி ஆகும்.


Kanns
மார் 07, 2025 10:03

Good Judgement But Should be Neutral Fast& Cheaper Costs to LitigantPublic


Raghavan
மார் 06, 2025 21:04

2022 ல் நடந்த கொலைக்கு 2025 ல் தீர்ப்பு என்பது நினைத்துப்பார்க்கமுடியாத ஒன்று. இதேபோல் அரசியல்வாதிகளுக்கும் 3 அல்லது 4 வருடங்களுக்குள் தீர்ப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எல்லோரையும் சமமாக நடத்துகின்றது என்று தேற்றிக்கொள்ளலாம். ஆனால் நடப்போதோ சாமானியனுக்கு ஒரு சட்டம் காசு பணம் உள்ளவர்களுக்கும் அரசியவாதிக்கும் ஒரு சட்டம் போல் நடக்கின்றது.


மோகன்
மார் 06, 2025 20:40

வெட்டி கொல்லப்பட்டவர் ஒரு ரவுடி தானே. ஏதோ தியாகிய கொலை செய்த மாதிரி நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது.


V RAMASWAMY
மார் 06, 2025 18:26

Very good.


சமீபத்திய செய்தி