மருத்துவ கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவு
திருநெல்வேலி:கொரோனா பாதிப்பிற்காக, மருத்துவமனை அதிகம் வசூலித்த கட்டணத்தை திரும்ப செலுத்த, நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை, 54, வருமான வரித்துறை ஆய்வாளர். இவர் மத்திய அரசின் மருத்துவத் திட்டத்தில் சேர்ந்திருந்தார். 2021ல் இவர் மற்றும் குடும்பத்தினர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். திருநெல்வேலி ஜங்ஷன் ஷீபா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சைக்கு கட்டணமாக, 2 லட்சத்து 66 ஆயிரத்து 367 ரூபாய் செலுத்தினர். சிகிச்சைக்கு பின், தனியார் மருத்துவமனை, மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனம் பரிந்துரைத்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தது. எனவே இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிறவி பெருமாள், உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர், 1.81 ஆயிரம் ரூபாயை வழங்கும் படி, மருத்துவ மனைக்கு உத்தரவிட்டனர்.