உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஊராட்சி கிளார்க் வெட்டிக்கொலை

ஊராட்சி கிளார்க் வெட்டிக்கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூரைச் சேர்ந்தவர் சங்கர், 52. இவர் வேப்பிலாங்குளம் ஊராட்சியில், கிளார்க்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். நேற்று காலை வேப்பிலாங்குளம் ஊராட்சிக்கு டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார். பெருங்குடி அருகே அவரை வழிமறித்த நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர்.பணகுடி போலீசார் சங்கரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். ஊராட்சி பணிகள் தொடர்பான முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 04, 2025 09:56

அதான பார்த்தேன், எங்கடா நம்ம திருநவேலியில ரெண்டு நாளா கொலை ஒண்ணும் நடக்கலியேன்னு


N Sasikumar Yadhav
பிப் 04, 2025 08:46

ஆஹா திருட்டு திராவிட மாடல் உலக புகழ்பெற்ற ஆட்சியில் இன்றைய நாள் இனிதாக விடிந்தது .