உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆணவக்கொலையில் தந்தை, மகனிடம் விசாரிக்க அனுமதி கோரி மனு

ஆணவக்கொலையில் தந்தை, மகனிடம் விசாரிக்க அனுமதி கோரி மனு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஐ.டி., ஊழியர் கவின் கொலையில் கைதான சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடியை சேர்ந்த ஐ.டி., ஊழியர் கவின் 27, திருநெல்வேலியில் கடந்த 27ம் தேதி அவரது காதலியின் தம்பியால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சுர்ஜித், அவரது தந்தை எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சுர்ஜித், சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க திருநெல்வேலி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி